அசோக் காலிங் அசோக் – பகுதி 4

Raja 2014-03-06 Comments

“யோவ்.. யார்யா நீ..? கூறு இல்லாத குட்டிச்சாத்தான் மாதிரி.. ஏன்யா இப்படி என் உசுரை வாங்குற..? காலை கட் பண்ணித் தொலையா..!!” எரிச்சலில் கத்தினேன்.

“ஓகே ஓகே.. கூல் கூல்..!! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?”

1

“டென்ஷன் ஆவாம..? யார்யா நீ..?”

“நான்தான் சொன்னனே.. நீதான் நான்.. நான்தான் நீ..”

“ஐயோ ஐயோ.. ராமா ராமா.. என்னால முடியலை.. இப்போ நீ காலை கட் பண்ணலை.. நான் போனை உடைச்சு கடாசிடுவேன்..”

“ஹே ஹே அசோக்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்டிலாம் பண்ணிடாத.. அப்புறம் இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டதுலாம் வேஸ்ட்டா போயிடும்..!!” அந்த ஆள் இப்போது கெஞ்ச ஆரம்பித்தான்.

“இல்ல.. இப்படியே நீ பேசிட்டு இருந்தேனா.. நான் உடைக்கத்தான் போறேன்..”

“ப்ளீஸ் அசோக்.. அப்டி மட்டும் பண்ணிடாத..!! உனக்கு இதோட இம்பார்ட்டன்ஸ் இன்னும் புரியலை.. உன்கிட்ட பேசுறதுக்காக நான் இருபத்து நாலு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்குறேன் அசோக்..!!” அந்த ஆள் ஃபீலிங்காக சொல்ல,

“இருபத்துநாலு வருஷமா வெயிட் பண்ணுறியா..? நான் பொறந்தே இருபது வருஷந்தான்யா ஆகுது..!! லூசு லூசு..!!” நான் புலம்பலாய் கத்தினேன்.

“புரியாம பேசாத அசோக்.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஒரு பேராப்பு வரப்போகுது..!! அதுல இருந்து உன்னை காப்பாத்ததான் இவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு கால் பண்ணுறேன்..”

“என்னது பேராப்பா..? அது பேராபத்துன்னுதான சொல்வாங்க..?” நான் இப்போது சற்றே ஆர்வமானேன்.

“இல்ல இல்ல.. ஆப்புதான்..!! 2020ல தமிழ் அகராதில சில கரெக்ஷன் பண்ணினாங்க.. அதுல நெறைய வேர்ட்ஸ் மாறிப்போச்சு.. ஆபத்துன்றதை ஆப்புன்னு மாத்திட்டாங்க..!! ‘ஆப்பிலே அறியலாம் அருமை நண்பனை’ன்னு பழமொழியை கூட மாத்திட்டாங்கப்பா..!!”

“ஓஹோ..? அப்படி என்ன எனக்கு பேராப்பு வரப் போகுது..? லேகா இனிமே எனக்கு செலவே பண்ண மாட்டேன்னு சொல்ல போறாளா..?”

“அதில்ல..”

“அப்போ.. அப்பா ஊர்ல இருந்து கெளம்பி வர்றாரா..?”

“ம்ஹூம்..”

“ம்ம்ம்ம்.. அந்த சோடாபுட்டி ஷோபனா எங்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண போறா..!! கரெக்டா..?”

“ஐயையோ.. அதெல்லாம் இல்லப்பா..”

“அதுவும் இல்லனா.. வேற என்ன..? இந்த ஜானிப்பையன் சைக்கோபாத் ஆகப் போறானா..?”

“உஷ்ஷ்ஷ்…என்னை கொஞ்சம் பேச விடுறியா..?”

“என்ன ஆப்புன்னு சீக்கிரம் சொல்லித் தொலையா..!! எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு..!!”

“நோ..!! அதை நான் இப்போ சொல்ல மாட்டேன்..!!”

“வேற எப்போ சொல்லுவ..? ஆப்பு வச்சு.. அதை உருவி.. ஆயின்ட்மன்ட்லாம் அப்ளை பண்ணப்புறம் சொல்வியா..?”

“அசோக்.. மொதல்ல உனக்கு என் மேல நம்பிக்கை வரணும்..”

“அது இந்த ஜென்மத்துல வராது..”

“வரும்..!! மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. உனக்கு நல்லது பண்றதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்..!!”

“எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நீ நெனச்சேன்னா.. நர்ஸ்கிட்ட புடுங்குன அந்த செல்போனை அவங்ககிட்டயே திருப்பி கொடுத்துட்டு.. டாக்டர்ங்க ஷாக் ட்ரீட்மன்ட் குடுக்குறதுக்கு முன்னாடி.. பெட்ல போய் மூடினு படுத்துக்கோ..!!”

2

“ஐயோ… என்னை லூசுன்னு முடிவே பண்ணிட்டியா..? அவசரப்படாம.. நான் சொல்றதை கொஞ்ச நேரம் பொறுமையா கேக்குறியா..?” அந்த ஆள் இப்போது டென்ஷனாக, நான் சற்று அடங்கினேன்.

“சரி கேக்குறேன்.. சொல்லித்தொலை..”

“டைம் மெசின் கேள்விப்பட்டிருக்கியா..?”

“டைம் மெசினா..? அப்டினா..? வாட்சா..??”

“ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா… முடியலை..!! உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது..? ம்ம்ம்ம்.. ஆங்.. டெர்மினேட்டர் படம் பாத்திருக்கேல..?”

“ம்ம்ம்..”

“அதுல அர்னால்ட் ஃப்யூச்சர் டைம்ல இருந்து.. ப்ரசன்ட் டைமுக்கு வந்து.. ஒரு சின்னப்பயனை காப்பாத்துவாருல..?”

“ஆமாம்.. அந்தப்பையனோட அம்மா ஒரு சப்பை ஃபிகர் இருக்கும்.. அதையும் சேர்த்து அறிவில்லாம காப்பாத்துவாரு..!!”

“அந்த மாதிரி.. ஒரு டைம் பீரியட்ல இருந்து இன்னொரு டைம் பீரியட்க்கு ட்ராவல் பண்றதுக்கு யூஸ் பண்ணுற மெசினுக்கு பேர் தான் டைம் மெசின்..!!” அந்த ஆள் சொல்ல சொல்ல, அந்தப் படத்தில் சொல்ல வந்த மேட்டர் என் மனதுக்குள் ஓடியது.

“ஓஹோ..?” என்றேன் ஓரளவு புரிந்தவனாய்.

“அதே மாதிரி நான் ஒரு மெசின் கண்டுபிடிச்சிருக்கேன்..!!”

“அதென்ன மெசின்..?”

“எலக்ட்ரோ மேக்னடிகோ அல்ட்ரா ஹை ஃப்ரிக்வன்சி ட்ரான்ஸ்மிட்டர் ஆஃப் மல்டிப்பில் அண்ட் பேரலல் டைம் ட்ரா..”

“யோவ்.. யோவ்.. இரு..!! என்னவோ பெடக்ஸ்ல கை வச்ச ஃப்ரெஞ்ச் ஃபிகரு மாதிரி.. எதுக்கு இப்போ என்னை திட்டுற..??”

“ஐயோ.. திட்டல அசோக்..!! அது நான் கண்டு பிடிச்ச மெசினோட பேரு..”

“அடத்தூ..!!! பேரே இவ்ளோ கேவலமா இருக்கே.. அந்த மெசின் எவ்ளோ கேவலமா இருக்கும்..? அதை கண்டுபுடிச்ச நீ எவ்ளோ கேவலமான ஆளா இருப்ப..? ஏன்யா.. உங்களுக்குலாம் அறிவே இல்லையா..? கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. கண்டதையும் கண்டு பிடிச்சு தொலைக்க வேண்டியது.. எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ்க உசுரை வாங்க வேண்டியது..!! இந்தப்பேரை எல்லாம் என் மெமரில ஏத்துனா.. என் மூளை தாங்காதுய்யா..!!”

“ஓகே அசோக்.. மெசின் பேரை வேணா.. சின்னதா, கேட்சியா மாத்திர்றேன்… இப்போ அந்த மெசின் பத்தி நான் சொல்றதை கொஞ்சம் கேக்குறியா..?”

“ம்ம்ம்.. சொல்லு…”

“இந்த மெசின்ல ட்ராவல்லாம் பண்ண முடியாது..!! ஆனா.. கடந்த காலத்துல இருக்குறவங்க செல்போனுக்கு கால் பண்ணி பேசலாம்..!! அது மூலமாத்தான் நான் இப்போ 2035ல இருந்து.. 2011ல இருக்குற உன்கூட பேசிட்டு இருக்குறேன்..!! எப்பூடி..?”

“ஓ.. ஓஹோ.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..??”

“கலாய்க்காத அசோக்.. என்னதான் இருந்தாலும் நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்னு மறந்துட்டு பேசாத..”

“ஹை.. நீயும் எலக்ட்ரானிக்ஸா..? நானும் எலக்ட்ரானிக்ஸ்தான்..!!”

“ஐயோ அசோக்..!!! நீதான் நான்னு ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்..? அதை ஏன் புரிஞ்சுக்காமலே பேசிட்டு இருக்குற..? எஞ்சினியரிங் முடிச்சுட்டு ரேடியோ பிசிக்ஸ்ல டாக்டரேட் வேற பண்ணிருக்கேன்..!! அப்போ இருந்து என் ஆராய்ச்சியை ஆரம்பிச்சு.. இந்த மெசினை டிசைன் பண்ணி.. இன்னைக்குத்தான் என் ஆராய்ச்சி சக்சஸ் ஆயிருக்கு..!! ஒரு பெரிய சாதனையை நான் இன்னைக்கு பண்ணிருக்கேன்..!! ஐ மீன்.. ஃப்யூச்சர்ல இதுலாம் நீ பண்ணப் போற..!!”

“யாரு.. நான்..? ஃப்யூச்சர்ல பி.எச்.டி-லாம் பண்ணப் போறனா..?”

“ஆமாம்..”

“யோவ்.. போய்யா..!! உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு இப்போ சுத்தமா போயிடுச்சு.. நானே எட்டு அரியரு பத்து அரியரா மாறிடக் கூடாதுன்னு.. எல்லையம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறதா வேண்டிருக்கேன்..”

3

“ஐயோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அசோக்.. அப்புறம் நீ என்னை மாதிரி பிரில்லியண்டா மாறிடுவ..”

“உன்னை மாதிரி..???”

“ஆமாம்..”

“போய்யா லூசு.. போனை கட் பண்ணுயா..!! இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசினேன்.. நானும் உன்னை மாதிரி மெண்டல்தான் ஆவேன்..”

“அசோக் ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாத..!! ம்ம்ம்ம்ம்ம்… ஓகே..!! நான் உன் வழிக்கே வர்றேன்.. நீதான் நான்னு நம்புறதுக்கு.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!”

அந்த ஆள் அப்படி சீரியசான குரலில் சொல்லவும் நான் ஒருகணம் அமைதியானேன். நிதானித்தேன். சற்றே யோசித்தேன். ஒரு வேளை இந்த ஆள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..? நான்தான் இந்த ஆளோ..? எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வெட்கமே இல்லாமல் வேறு பேசிக் கொண்டிருக்கிறான்..?? ஜானியின் எஃபக்டில்.. எதிர்காலத்தில் நான் இப்படி ஆகி விட்டேனோ..?? என்னுடைய எரிச்சல் குறைந்து, சற்றே இயல்பான குரலில் கேட்டேன்.

“சரி.. நான் கொஞ்சம் கேள்விலாம் கேக்குறேன்.. பதில் சொல்றியா..?”

“ம்ம்.. கேளு..!!”

“என் குடும்பத்தை பத்தி சொல்லு.. அவங்க பேர், கேரக்டர்லாம் சொல்லு..”

அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தான். என்னைப்பற்றி.. என் அப்பா, அம்மா பற்றி.. தாத்தா, பாட்டி பற்றி..!! அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். மேலும் மேலும் நிறைய கேள்விகள் என்னைப் பற்றி கேட்டேன். எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் பற்றி கேட்டேன். (எ.கா) என் உடலில் அந்தரங்க இடங்களில் இருக்கும் மச்சங்கள்..!! ஹிஹி..!!

எல்லாமே ‘பட்.. பட்.. பட்..’ என அடித்தான். அப்புறம் நான் கேட்காமலே, என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை, அவனாகவே சொன்னான். ஒண்ணாவது படிக்கையில்.. அடுத்த வீட்டு அபிக்குட்டியுடன் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியது..!! அஞ்சாவது படிக்கையில்.. கிரிக்கெட் பால் பட்டு என் குஞ்சாமணி வீங்கியது..!! எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில்.. என்னிடம் டைரி எழுதச்சொன்ன எஸ்தர் டீச்சரிடம்.. ‘ஐ லவ் யூ.. டீச்சர்..’ எழுதிக் காட்டி அறை வாங்கியது..!! இன்னும் கூட சில விஷயங்கள் சொன்னான். அதெல்லாம் சென்சார்ட்..!! அதெல்லாம் சொன்னால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் நாசமாக போகி விடும். (‘இப்போது மட்டும் என்ன வாழுதாம்’ என்று கேட்காதீர்கள்)

Comments

Scroll To Top