அசோக் காலிங் அசோக் – 6

(Sex Stories In Tamil - Ashok Calling Ashok 6)

Raja 2014-03-08 Comments

Sex Stories In Tamil – அவள் எனக்கும் ஜானிக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொள்ள, நாங்கள் குவார்ட்டரின் கழுத்தை திருகி, உள்ளே உள்ள யெல்லோ நிற திரவத்தை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றினோம். ‘ஜானியை ஏன் அடித்து விரட்டவில்லை..’ என்று பிங்கி என்னிடம் ஜாடையில் கேட்டாள். ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிங்கி..’ என்று நான் பார்வையாலேயே கெஞ்சினேன். மேட்ச் ஆரம்பித்தது. நாங்களும் சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தோம்..!! (நாங்களும் = நானும், ஜானியும்..!! பிங்கிக்குலாம் அந்தப் பழக்கம் இல்ல..!!)

1

“ஆண்ட்டியை கூட்டிட்டு வரலையா பிங்கி..?” ஜானி கேட்டான்.

“அவங்க எதுக்கு..?” பிங்கி கடுப்பாக கேட்டாள்.

“அவங்க இருந்தா ஜாலியா இருக்குமேன்னு சொன்னேன்..”

“என்னது..????” பிங்கி சூடானாள்.

“இல்ல.. எல்லாரும் ஜாலியா கிரிக்கெட் பாக்கலாம்னு சொன்னேன்..”

குடிபோதையில் ஜானி உளற, பிங்கி அவனையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னிடம் திரும்பி ‘முடியலைடா..!!’ என்பது போல முகம் சுளித்தாள். நான் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தேன். யாருக்கும் சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலை. மேட்ச் பார்த்து இந்தியாவுக்காவது சப்போர்ட் செய்யலாம் என்று பார்த்தால், நம்மாட்கள் போட்ட பந்தை அவர்கள் சுளுக்கெடுத்தார்கள். கீஸ்வேட்டர் என்று ஒருத்தன் வந்து கிழிய கிழிய அடித்தான் (பந்தைத்தான்..!! ஹிஹி..!!). குக் என்பவன் வந்து குமுறு குமுறு என குமுறினான். பின்பு பீட்டர்சன் வேறு வந்து பிரித்து மேய்ந்தான். நமது பவுலர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

ஒரு வழியாய் இங்கிலாந்து இன்னிங்க்ஸ் முடிந்தது. 50 ஓவரில் 325 ரன்கள் அடித்து விட்டார்கள். இங்கே நாங்களும் வாங்கி வந்த குவார்ட்டர்களை அடித்து காலி செய்திருந்தோம். ஜானி மட்டையாகி இருந்தான். போதை உச்சத்துக்கு ஏறி ‘ஆண்ட்டி வடை சூப்பர்..!!’ என்று டபுள் மீனிங்கில் பேசி, பிங்கியிடம் அறை வாங்கியவன், அப்படியே சாய்ந்து விட்டான். நானும் உச்ச பட்ச போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். பிங்கி மட்டும் சிகரெட் நெடி தாங்காமல் மூக்கைப் பொத்தியவாறு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் இந்தியா பேட்டிங் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே முட்டை கிடைத்த சந்தோஷத்தோடு சேவாக் வெளியேறினார். ‘நண்பன் இல்லாமல் நான் ஆட மாட்டேன்’ என்றவாறு கவுதம் கம்பீரும் கம்பெனி கொடுக்க சென்று விட்டார். 50 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகள் போய்விட்டன. ஆனால்.. அதற்காகவெல்லாம் நான் கலங்கவில்லை. சீனியர்தான் சொல்லியிருக்கிறாரே.. நாமதான் இன்று ஜெயிக்கிறோம்..!! பிங்கி குஷியாக மேட்ச் பார்க்க.. நானும் சந்தோஷமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என் சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ராகுல் டிராவிட்டிற்கு ராங்காக LBW கொடுக்க, எனக்கு மனதுக்குள் லேசாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ‘எதோ ஒரு லூசு சொன்னதை நம்பி செல்போனை பெட்டாக கட்டிவிட்டேனோ..?’ என்று உதறலெடுக்க ஆரம்பித்தது. பிங்கி வேறு ஒவ்வொரு விக்கெட்டுக்கும், என் செல்போனை திரும்பி பார்த்து ஆசையாக லுக் விட்டுக் கொண்டிருந்தாள். ஐயையோ.. ஒருவேளை இந்தியா தோற்றுவிட்டால், செல்போனை இவளிடம் இழப்பதுடன், லேகாவிடம் வேறு செவுளிலேயே அறை வாங்க வேண்டுமே..?? கடவுளே.. என்ன இது சோதனை..??

கோஹ்லியும், டோனியும் மட்டும் கொஞ்ச நேரம் டொக்கு வைத்து ஆடினார்கள். மற்றவர்கள் எல்லாம் ‘வந்தார்கள்.. நின்றார்கள்.. சென்றார்கள்..’ ஆயினர். நேரம் ஆக ஆக எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது. எட்டு விக்கெட், ஒன்பது விக்கெட்டானது. இன்னும் 50 பந்துகளில் 122 ரன்கள் எடுக்க வேண்டும். இவ்வளவு நேரம் லுக் விட்டுக் கொண்டிருந்த செல்போனை, பிங்கி இப்போது தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்திருந்தாள். எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. குடித்த போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போயிருந்தது. குலுங்கு குலுங்கி அழ வேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் செல்போனுக்கு அந்த கால் வந்தது. ‘ASHOK CALLING..!!!!’ அதைப் பார்த்ததும் நான் செமக் கடுப்பானேன். ‘மவனே.. உன்னால்தான் எல்லாம்..’ என்று மனதுக்குள் கருவியவாறு என் செல்போனை எடுத்தேன். ‘இதோ.. வந்துர்றேன் பிங்கி..’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, மொட்டை மாடிக்கு ஓடி வந்தேன். கால் பிக்கப் செய்ததும் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தேன்.

“யோவ்.. கேனை.. லூசு.. மெண்டல்..!! இப்படி பண்ணிட்டியேயா..?”

2

“ஏன் ஜூனியர் திட்டுற..? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்..?” சீனியர் எதுவும் புரியாதவராய் கேட்டார்.

“பின்ன..? இந்தியா ஜெயிக்கும்னு சொன்னியேயா..?”

“ஆமாம்..”

“போய்யா.. இந்தியா தோக்கப் போகுதுயா..!!”

“தோக்கப் போகுதா..? அப்புறம் எதுக்கு இந்தியா ஜெயிச்சதுன்னு நான் எழுதி வச்சிருக்கேன்..?”

“ஆமாம்.. அதை எங்கிட்ட வந்து கேளு..!! அது நீ ஏதாவது மப்புல எழுதிருப்ப..?”

“ஜூனியர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அதை நீயும் எழுதப் போறேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!! மப்புல எழுதிருப்பேன்ற..? அப்டினா.. நீ இப்போ மப்புல இருக்கியா..??” சீனியர் சீரியாசான குரலில் கேட்க,

“ஆ..ஆமாம்..!!! அ..அதெப்படி உனக்கு தெரியும்..???” நான் திணறினேன். இப்போது சீனியரும் குழம்பினார்.

“ஐயையோ.. ஒருவேளை குடிபோதைல.. இந்தியா ஜெயிச்சிருச்சுன்னு தப்பா எழுதிட்டமோ..?”

“நான் எங்கேயா எழுதினேன்..? நீதான் எழுதிருக்குற..!! எனக்கு ஒன்னும் ரொம்பலாம் மப்பு இல்ல.. ஜானிதான் நெறைய குடிச்சுட்டு.. பிங்கிட்ட அறை வாங்கிட்டு மட்டையாயிட்டான்..!!”

“ஹேய் ஹேய்.. இரு இரு.. இப்போ எனக்கு ஞாபகம் வருது..!! நான், ஜானி, பிங்கி மூணு பேரும் உக்காந்து பார்த்தோமே.. பிங்கியோட அம்மா கூட வடை, பஜ்ஜிலாம் போட்டுக் கொடுத்தாங்களே.. அந்த மேட்சா இது..?”

“ஆமாம்யா..!! அந்த மேட்ச்தான்..!!”

“ஜூனியர்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிச்சது..!!”

“யோவ் போய்யா..!! ஒன்பது விக்கெட் போயிடுச்சு.. இனிமே எங்க ஜெயிக்க போறானுக..?”

“ஒரு நிமிஷம் இரு..”

சொன்ன சீனியர் கொஞ்ச நேரம் அமைதியானார். அப்புறம் அந்தப் பக்கம் அவர் டைரி புரட்டும் சப்தம் கேட்டது. நான் அமைதியாக காத்திருந்தேன். சிலவினாடிகளில் சீனியர் உற்சாகமாக சொன்னார்.

“அந்த மேட்ச் இந்தியாதான் ஜெயிச்சிருக்கு ஜூனியர்.. முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சு ஜெயிக்க வச்சிருக்காரு..” அவர் சொல்ல சொல்ல, எனக்கு மயக்கம் வராத குறைதான்..!!

“என்னது..??? முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சாரா..? என்னய்யா சொல்ற நீ..??”

“ஆமாம் ஜூனியர்.. அவர் வெளையான்டதை நீ பார்த்தியா..?”

“எங்கேயா பார்த்தேன்..? அப்போதான் வந்து இறங்குனாரு.. அதுக்குள்ளதான் உன் கால் வந்துடுச்சே..?”

“ஓஹோ..? மேட்சை முழுசா பார்க்காமத்தான்.. எங்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்கியா..? போய் மொதல்ல மேட்சை முழுசா பாரு.. நான் அப்புறம் கால் பண்ணுறேன்..!!”

சொல்லிவிட்டு சீனியர் கனெக்ஷனை கட் செய்ய, நான் விழுந்தடித்துக் கொண்டு கீழே ஓடினேன். எங்கள் அறைக்கதவை உள்ளே தள்ளியவன், அங்கே பிங்கி அமர்ந்திருந்த போஸை பார்த்து அதிர்ந்து போனேன். சிப்ஸ் அரைபட்ட வாயை மூடக்கூட தோன்றாமல், ‘ஆ’ வென பிளந்தவாறு வைத்திருந்தாள். டிவியை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நிலையை பார்த்து நான்தான் பயந்து போய் கேட்டேன்.

“பிங்கி.. என்னாச்சும்மா..? ஏதோ பேய்கிட்ட ஃப்ளையிங் கிஸ் வாங்குனவ மாதிரி உக்காந்திருக்குற..?”

“இங்க பாருடா இந்தக்கொடுமையை..!!” அவள் டிவி நோக்கி கை நீட்டினாள்.

3

நான் திரும்பி டிவியை பார்த்தேன். ஆக்ஷன் ரீப்ளே ஓடிக்கொண்டிருந்தது. ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை, அசால்டாக சிக்சருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் முனாஃப் படேல்..!! அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் ஓடிய விஷயங்களை எங்களால் நம்பவே முடியவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை முனாஃப் படேல் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசு விளாசு என்று விளாசினார். இங்கிலாந்து ப்ளேயர்கள் இனிமா குடித்தவர்கள் மாதிரி விழித்தார்கள். ஒருபக்கம் இஷாந்த் ஷர்மா சிங்கிள் எடுத்துக் கொடுக்க, ஒற்றை ஆளாய் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்தார்.. முனாஃப் படேல்..!!

தான் செல்போன் இழந்ததை இன்னும் நம்ப முடியாமல், பிங்கி பித்துப் பிடித்தவள் மாதிரி ஒரு நடை நடந்து, வீட்டை விட்டு வெளியேறினாள். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பிரசன்டேஷன் செர்மனி பார்த்துக்கொண்டே சீனியரின் காலுக்காக வெயிட் பண்ணினேன். கால் வந்ததும் மொட்டை மாடிக்கு சென்று, பிக்கப் செய்து பேசினேன். சந்தோஷத்தில் கத்தினேன்.

“ஹாய் சீனியர்.. கலக்கிட்டீங்க சீனியர்..”

“என்ன ஜூனியர்.. இந்தியா வின் பண்ணிடுச்சா..?”

“வின்னோ வின்னுன்னு வின் பண்ணிடுச்சு.. என்னால நம்பவே முடியலை..”

Comments

Scroll To Top